கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம்

கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கால்நடைகளுக்கான பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம்
Published on

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பாஸ்கர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல உதவி இயக்குனர் அருள்குமாரி முன்னிலை வகித்தார். நொய்யல் கால்நடை மருத்துவமனை டாக்டர் உஷா தலைமையிலான குழுவினர் 200-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி போட்டனர். அதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவனம் வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com