

சென்னை,
தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் திடீரென தொடர் கனமழை பெய்தது. ஒரு நாளில் பல மணிநேரம் பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து முடங்கியது.
இதேபோன்று மறு நாளும் பெருமளவில் மழை பெய்தது. இதனால், சென்னையின் முக்கிய பகுதிகள், புறநகர் மற்றும் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கின. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றில் சென்னை தியாகராய நகரும் ஒன்று.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்கப்படாத சூழலால் தியாகராய நகரில் மழைநீர் தேங்கியது. ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க குழு அமைக்கப்படும் என கூறியுள்ளார்.