ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு - நகராட்சி நிர்வாகத்துறை தகவல்

தமிழகத்தில் 11 நகரங்களில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என நகராட்சி நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு - நகராட்சி நிர்வாகத்துறை தகவல்
Published on

சென்னை,

நகராட்சி நிர்வாகத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 10 ஆயிரத்து 804 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் 2023 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிறைவு பெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற வீடற்றோருக்காக சென்னை மாநகராட்சியில் 55 வீடற்றோர் காப்பகங்கள் நடத்தப்படுவதாகவும், மேலும் 28 புதிய நகர்ப்புற வீடற்றோர் காப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு 2-ம் கட்ட ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் உள்ள 126.89 லட்சம் வீடுகளில் இதுவரை 52.99 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 67.53 லட்சம் வீடுகளுக்கு வரும் 2024 மாட்ச் இறுதிக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் பகுதிகளில் போக்குவரத்து தேவைகளை தீர்க்க 904 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் உதவியுடன் திறன்மிகு போக்குவரத்து திட்டம் தொடங்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com