‘ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிடப்படவில்லை’ - அமைச்சர் நிர்மல்குமார்

இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
‘ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிடப்படவில்லை’ - அமைச்சர் நிர்மல்குமார்
Published on

சென்னை,

மின் வாரிய ஊழியர்கள் உதவியின்றி மின் பயன்பாட்டைக் கணக்கிடும் ரூ.20,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிடப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிடவில்லை. இந்த திட்டத்துக்கான சாத்திய கூறுகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com