திருச்சி விமான நிலையத்தில் ரூ.10½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.10½ லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை பிரிவு பகுதியில் கேட்பாரற்று ஒரு அட்டை பெட்டி கிடந்தது. அதனை அதிகாரிகள் சோதனை செய்ததில் பவுடர் வடிவிலான தங்கம் இருந்தது.

வெளிநாட்டில்இருந்து கடத்தி வந்த யாரா மர்ம ஆசாமிகள் அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விட்டு சென்றுள்ளனர். அந்த அட்டை பெட்டியில்இருந்து ரூ.10 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோட்டாட்சியரிடம் மனு

*முசிறி ஊராட்சி ஒன்றியம் ராக்கம்பட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் முசிறி கோட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இதில் புறம்போக்குநடைபாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மாணவியிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது

*தொட்டியம் தாலுகா திருஈங்கோய்மலை பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துச்சாமி மகள் குமுதா (வயது20). இவர் முசிறி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது, லால்குடி அருகே உள்ள திருமங்கலம் மேட்டு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடேசன் (23) என்பவர் கத்திய காட்டி மிரட்டி ரூ.1,400-ஐ பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனை பிடித்து முசிறி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பெண்ணை கிண்டல் செய்தவர் கைது

*திருச்சி கருமண்டபம் சமத்துவ நகர் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகள் பிரியா (26), இவர் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் (42) என்பவர் பிரியாவை கிண்டல் செய்துள்ளார். இது குறித்து காந்தி மார்க்கெட்போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com