

நெல்லை,
மேற்கு வங்காளத்தில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் கடத்திய 13 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். மேற்கு வங்காள மாநிலம் புருலியாவில் இருந்து நெல்லைக்கு வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நேற்று முன்தினம் நெல்லை நோக்கி வந்தபோது, ரெயில்வே போலீஸ் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணா துரை மற்றும் போலீசார் திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி-திண்டுக்கல் இடையே பயணிகள் உடைமைகளை சோதனை செய்தபோது பின்னால் உள்ள பொதுப்பெட்டியில் 2 கருப்பு கலர் பைகளில் 13.800 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை கடத்தி வந்த மேற்கு வங்காள மாநிலம் முஸ்சிதாபாத் காசிபுரா பொலாகிரி பாம்நாபாத்தைச் சேர்ந்த சுபாஷ்குமார் மாண்டல் (வயது 28), ராணா மாண்டல் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.