4 டன் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது

4 டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4 டன் ரேஷன் அரிசி கடத்தல்; வாலிபர் கைது
Published on

நெல்லை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் நேற்று நெல்லை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மறுகால்குறிச்சி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லோடுஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லோடு ஆட்டோவை ஓட்டிவந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூதபாண்டியை சேர்ந்த லாரன்ஸ் மகன் ஆனந்த் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து அரிசி, லோடு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய சங்கரன்கோவிலை சேர்ந்த சண்முகராஜூ, தோவாளையை சேர்ந்த அனிஸ்குமார், கேரளாவை சேர்ந்த தாஹீர், சமீர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com