காரில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது

காரில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டது.
காரில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் ரோஷண போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையிலான போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து 20 அட்டைபெட்டிகளில் 1960 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதை கடத்தி வந்தவர் திண்டிவனம் முருங்கப்பாக்கம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த சீதாராமன் மகன் கெஜராஜ் (வயது 34) என்பது தெரியவந்தது.இதையடுத்து, மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கெஜராஜை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com