திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டா.
திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
Published on: 

திருக்கோவிலூர், 

மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சித்தப்பட்டினம் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த, மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 2 ஆயிரத்து 400 பாக்கெட்டுகள் இருந்தது. இவற்றை திருக்கோவிலூர் பகுதிக்கு கடத்தி வந்தது தெரியவந்து. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக அதன் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா விசுவாசம் பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் தாமரைச்செல்வன் (வயது 33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X