பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி இறந்தார்
பாம்பு கடித்து விவசாயி பலி
Published on

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த கலுங்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மயக்கமடைந்த ரமேசை உறவினர்கள் மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com