சின்னமனூரில் தீப்பிடித்து எரிந்த வைக்கோல் படப்பில் இருந்த கருநாகம் மீட்பு

சின்னமனூரில் தீப்பிடித்து எரிந்த வைக்கோல் படப்பில் இருந்த கருநாகம் மீட்கப்பட்டது.
சின்னமனூரில் தீப்பிடித்து எரிந்த வைக்கோல் படப்பில் இருந்த கருநாகம் மீட்பு
Published on

சின்னமனூர் அண்ணாமலை நகரில் சுருளி என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் வைக்கோல் படப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த வைக்கோல் படப்பில் திடீரென்று தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சின்னமனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், வைக்கோல் படப்பில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வைக்கோல் படப்பின் அடியில் கருநாகம் ஒன்று சுருண்டு கிடந்தது. இதனை பார்த்த தீயணைப்பு படைவீரர்கள், பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கருநாகத்தை பிடிக்க முயன்றனர்.

அப்போது அது அங்கிருந்து தப்பி செல்ல முயன்றது. இருப்பினும் கருநாகத்தை தீயணைப்பு படைவீரர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் அது வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை ஊழியர்கள், கருநாகத்தை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com