பாலக்கோடுதொழிலாளி வீட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது

தொழிலாளி வீட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது.
பாலக்கோடுதொழிலாளி வீட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே கக்கன்ஜிபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் நேற்று 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தியின் குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பாம்பை பிடித்து பாலக்கோடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் பாம்பை பிக்கிலிகாப்பு காட்டுக்கு எடுத்து சென்று விட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com