வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழி கேட்பது போல் நடித்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Published on

திருவாலங்காடு ஒன்றியம் தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 34). சென்னையில் அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா (30). இவர் நேற்று மாலை வீட்டில் வளர்க்கும் மாடுகளைப் பிடித்துக் கொண்டு சாலையோரம் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் லாவண்யாவிடம் வழி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து லாவண்யா கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப் பகலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com