நன்னிலம் பகுதியில் பனி மூட்டம்

நன்னிலம் பகுதியில் பனி மூட்டம் காண்பட்டது.
நன்னிலம் பகுதியில் பனி மூட்டம்
Published on

மார்கழி, தை மாதத்தில் தான் பனிமூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது ஐப்பசி மாதத்தில் நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இந்த பனிமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். அதேபோல் திருமக்கோட்டை, தென்பரை, பாளையக்கோட்டை, இளவனூர், கன்னியாகுறிச்சி, ராதாநரசிம்மபுரம், மேலநத்தம், கோவிந்தநத்தம் உள்ளிட்ட பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com