கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன
Published on

சென்னை,

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற்று வருகின்றன. 2-ம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 1.48 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

சிறப்பு முகாம்கள்

இந்த 2 முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவை ஏற்பட்டால் சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும். கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரியதகவல்களை விண்ணப்பத்தாரர்கள் அளித்து தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com