வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 4,788 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 4,788 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 4,788 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,788 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 690 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 443 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 3655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திற்கு பிறகு இதுவரை 3,96,138 பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com