இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள், படகு பறிமுதல்

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கொண்டு செல்வதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள், படகு பறிமுதல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கொண்டு செல்வதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், கபிரியேல் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு புறம் உள்ள வாடையில் ஒரு ஃபைபர் படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட போலீசார் அங்கே விரைந்து சென்றனர். போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கே இருந்த பதிவு எண் இல்லாத இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட அதிவேக ஃபைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 அட்டைப்பெட்டிகளில் இருந்த 1,200 பப்பாளி வாசனை சோப்புகள் (Nature power Papaya Soap) கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சோப்புகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சோப்புகள் மற்றும் படகு குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருவதோடு, தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com