சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

சாலையை சீரமைக்க கோரியும் வாசகம் எழுதிய பதாகையுடன் சேதம் அடைந்த சாலையில் வாகனத்தை நிறுத்தி அமர்ந்து இருந்தார்.
சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் நூதன போராட்டம்
Published on

கரீம்நகர்,

தெலுங்கானா மாநிலத்தில் சமூக சேவகர் கோட்டா ஷியாம் குமார் என்பவர் கரீம்நகர்-ஜக்தியால் சாலையில் தலைகவசம் அணிந்து அமர்ந்து நூதன போராட்டம் நடத்தினார். கரீம் நகரில் சாலைகளை சரிசெய்வதில் அதிகாரிகளின் அலட்சியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், சாலையை சீரமைக்க கோரியும் வாசகம் எழுதிய பதாகையுடன் சேதம் அடைந்த சாலையில் வாகனத்தை நிறுத்தி அமர்ந்து இருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஹெல்மெட் அணியாவிட்டால், வாகன உரிமம், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால், வேகமாக வாகனம் ஒட்டினால், சிக்னலை மீறினால், காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் என பல விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

வாகனம் வாங்கம் போது ஜி.எஸ்.டி., சாலை வரி ஆகியவற்றை கட்டுகிறோம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ எவரும் கவனம் செலுத்தவில்லை. இதனால் வாகனங்கள் பழுதடைகிறது. பொது சுகாதாரத்தை பாதிக்கப்படுகிறது. சாலைகளை சீரமைக்க தவறியதற்காக கலெக்டர், போலீஸ் கமிஷனர் எவ்வளவு அபராதம் செலுத்துவார்கள் என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com