திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
Published on

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் நேற்று அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் சமூக நீதி நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அப்போது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்!. சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!.

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!. மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று கூறி அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com