பதவி உயர்வில் சமூகநீதி: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தரவரிசை பட்டியல் சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர் தலைமையில் குழு அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு சட்ட ரீதியிலான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






