ரங்கப்பனூர் புளியங்கோட்டை சாலையில் மண் அரிப்பு

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கனமழை ரங்கப்பனூர் புளியங்கோட்டை சாலையில் மண் அரிப்பு
ரங்கப்பனூர் புளியங்கோட்டை சாலையில் மண் அரிப்பு
Published on

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கல்வராயன்மலை மற்றும் அதன் அடிவாரப்பகுதி கிராமங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலைவரை கனமழை பெய்து வந்தது. இதனால் ரங்கப்பனூர், லக்கிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் அதிக அளவில் வந்துள்ளது.

ரங்கப்பனூர் பகுதியில் இருந்து புளியங்கோட்டை வரை தற்போது சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ரங்கப்பனூர் பகுதியில் இருந்து லக்கி நாயக்கன்பட்டி செல்லும் ஏரிக்கரை சாலையில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தொடர் மழையால் சாலை ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, அந்த பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com