காங்கயம் அருகே காடையூர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பழுதடைந்த ஒளிரும் விளக்கை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published on

காங்கயம் அருகே காடையூர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பழுதடைந்த ஒளிரும் விளக்கை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோலார் விளக்கு

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, கிராமப்புற சாலை மற்றும் பிரதான சாலைகளாகட்டும், சிறிய சாலைகளாட்டும், அவற்றில் வளைவான பகுதிகளில்தான் விபத்துக்கள் நடப்பது அதிகம். இப்படிப்பட்ட சாலையின் வளைவான பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் புதிதாக வரும் வாகன ஓட்டுனர்கள் வேகமாக வரும் போது வளைவுகள் இருப்பது தெரியாமல் வாகனத்தை இயக்கி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதில் சில சமயம் பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், சில சமயம் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி பிழைப்பதும் உண்டு.

இந்த நிலையில் காங்கயம் பகுதியில் விபத்துக்களை தடுக்கும் விதமாக அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான வளைவுகள் மற்றும் விபத்து பகுதிகளில் சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவு, பகல் நேரங்களில் விட்டு விட்டு ஒளிர்வதால் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் இரவு மற்றும் பகல் நேரங்களில் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்கி வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்ட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஒளிரும் சோலார் சிக்னல் விளக்குகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

சீரமைக்க வேண்டும்

இந்த நிலையில் காங்கயம் அருகே காடையூர் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் சோலார் விளக்கு கடந்த சில நாட்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் வளைவான பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த இந்த ஒளிரும் சோலார் விளக்கை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com