மாதவரம் பேருந்து நிலையத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்

மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
மாதவரம் பேருந்து நிலையத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டம்
Published on

சென்னை,

சென்னையில் இருந்து ஆந்திரா, தெலங்கானா செல்லும் புறநகர் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தின்படி மாதவரத்தில் 95 கேடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் புறநகர் துணை பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

கழிப்பறை, குடிநீர் வசதி, பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டுக்கு எல்.இ.டி அறிவிப்பு பலகை, நுழைவு வாயிலில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நெட் ஜீரோ இலக்கை எட்டும் வகையில், மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், அப்பணிகள் நிறைவு பெற்றவுடன் சேலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com