மானிய விலையில் சூரிய சக்தி பம்பு செட்டு திட்டம்: போலி இணையதளங்கள் மூலம் மோசடி

மானிய விலையில் சூரிய சக்தி பம்பு செட்டு திட்டம்: போலி இணையதளங்கள் மூலம் மோசடி - தமிழக அரசு எச்சரிக்கை.
மானிய விலையில் சூரிய சக்தி பம்பு செட்டு திட்டம்: போலி இணையதளங்கள் மூலம் மோசடி
Published on

சென்னை,

மாநில அரசின் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 40 சதவீத நிதி உதவி மற்றும் மத்திய அரசின் புதிய மற்றும் பிதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் பிரதம மந்திரி விவசாயிகள் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 30 சதவீத நிதி உதவி என மொத்தம் 70 சதவீத மானியத்தில், விவசாயிகளுக்கு மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் 10 குதிரைத்திறன் வரையிலான பம்பு செட்டுகள் அமைத்து தரப்படுகிறது.

இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கான போர்ட்டல் வலைதளங்கள் என்று பொய்யான சில மோசடி இணையதளங்கள் மூலம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து பணம் மற்றும் தகவல்களை சேகரிப்பது தெரியவந்துள்ளது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மூலம் கடந்த காலங்களில், இதுகுறித்து பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு என எந்தவொரு பதிவுக் கட்டணத்தையும் டெபாசிட் செய்யவோ அல்லது பொய்யான வலைதளங்களில் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் பகிரவோ வேண்டாம் என்று பொது மக்களுக்கு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, சந்தேகத்திற்குரிய இணைய தளத்திற்கான லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. புதிய மற்றும் பிதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணையதளம் www.mnre.gov.in மற்றும் மாநில அரசின் இணையதளம் https://pmkusum.tn.gov.in, https://mis.aed.tn.gov.in, https://www.aed.tn.gov.in மூலம் மட்டுமே பதிவு மற்றும் திட்டம் பற்றிய தகவல்களுக்கு அணுக வேண்டும்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com