

சென்னை,
சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்க முடியாதது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று . தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்காலத்தை வேறு மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என மீனவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும். மீன்பிடி தடைக்காலத்தை மாற்றுவது குறித்து அனைத்து கடலோர மாநிலங்களுடன் விவாதிக்க வேண்டும் என கூறினார்.