எல்லாரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு


எல்லாரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
x

மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருகிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை

ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கி, சமூக நீதியை நிலைநாட்டிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின கூறியதாவது:-

இன்று எனக்கு உணர்ச்சிப்பூர்வமான நாள். இந்த விழாவுக்காக மட்டுமல்ல, இந்த இடத்துக்காகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். வள்ளுவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சூட்டிய புகழ் மாலைகளில் மிக முக்கியமானது 1974-ல் அவர் அடிக்கல் நாட்டிய இந்த வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவர் சிலையும், திருவாரூர் தேரும் அமைந்துள்ள இந்த கோட்டம் கலைஞரின் கனவு படைப்பு. இந்த கலை கருவூலத்தைத்தான் நாம் தற்போது 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்திருக்கிறோம்.

பாராட்டுக்காக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. உங்கள் அன்புக்காகத்தான் பங்கேற்றிருக்கிறேன். நான் எப்போதும் உங்களில் ஒருவன்; மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசியலுக்காக, தேர்தலுக்காக இதை செய்யவில்லை; உள்ளார்ந்து செய்கிறேன். உங்கள் கோரிக்கைகளுக்கு நீங்களே தீர்வு காண உள்ளாட்சி அமைப்பில் பொறுப்பு வழங்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 பேர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,984 பேர் நியமிக்கப்படுவர். மாவட்ட வாரியாக ஜூலை 1 முதல் விண்ணப்பம் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருகிறார்கள். உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள். சமூக தடைகளை உடைத்து முன்னேறி வருகின்றனர். முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதை உண்மையிலேயே நிரூபித்து வருபவர்கள் மாற்றுத்திறனாளிகள்தான். உங்களுக்கு நான் இருக்கிறேன்; இந்த அரசு இருக்கிறது என நம்பிக்கையோடு செயல்படுங்கள். உங்களுக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்குவது எனது கடமை. இது எல்லாருக்குமான ஆட்சி. ஆனால் எல்லாரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லா சமூகத்தினரும் முன்னேற கூடாது என வகுப்புவாத சக்திகள் நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story