போலீஸ் நிலையத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
போலீஸ் நிலையத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி
Published on

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் முண்டன் (வயது 40). இவருடைய மனைவி இவரைப் பிரிந்து நெல்லையில் வசித்து வருகிறார். நேற்று மனைவியை பார்க்க நெல்லைக்கு வந்த முண்டனை ஒரு சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முண்டன் நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்ய சென்றார். அப்போது போலீசார் நீங்கள் புகாரை மனுவாக எழுதி விட்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர். உடனே வெளியே வந்த முண்டன் தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து பாட்டிலை கைப்பற்றி அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினா. பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com