மகன் கைது

தாய்-தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது
மகன் கைது
Published on

பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருநகரை சேர்ந்தவர் நீலாதுரை (வயது 55). கூலி தொழிலாளி. இவரின் மகன் நாராயண பெருமாள் (20). இவருக்கும், இவரின் தந்தை நீலாதுரை, தாய் ஆகியோருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாம். சம்பவத்தன்று நாராயண பெருமாள் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தாய் மற்றும் தந்தை நீலாதுரையை குத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயம் அடைந்த 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குப்பதிவு செய்து நாராயண பெருமாளை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com