

தேனி,
தேனி மாவட்டம் கூடலூர் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமாயன் (80). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது மகன் கணேசன் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். மேலும், அவர் மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு தந்தையைப் பார்க்க கணேசன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் தன்னை பெற்ற தந்தை என பார்க்காமல் முத்துமாயனின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், இதனைப் பார்த்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் வடக்கு போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, தப்பியோடியதாக கூறப்பட்ட கணேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.