நெல்லையில் மாமனாரை மிரட்டிய மருமகன் கைது

முக்கூடல் பகுதியில் கணவன்-மனைவி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வசித்து வந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சிங்கம்பாறை, இந்திராநகரை சேர்ந்த சகாயடேவிட் (வயது 27) என்பவரும் ஜெல்சியா என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, சகாயடேவிட்டை பிரிந்து, ஜெல்சியா கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதனை மனதில் வைத்து கொண்டு 29.6.2025 அன்று ஜெல்சியாவின் தந்தை ஸ்டீபன்(50) வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அவரின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த சகாயடேவிட், அவரை அவதூறாக பேசி அரிவாளால் வீட்டின் வாசலில் இருந்த மரக்கதவை வெட்டி சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீபன் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சகாயடேவிட்டை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.






