மருமகன் கைது

முதியவர் கொலை வழக்கில் மருமகன் கைது
மருமகன் கைது
Published on

சாயர்புரத்தை சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகன் சிம்சன் (வயது 75). இவருக்கும், இவருடைய மூத்த மருமகன் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஜெராமன் மகன் முருகன் என்பவருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்சனை, அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீச முயன்ற போது, போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். அதே நேரத்தில் முருகன் தப்பி சென்று விட்டார்.

இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து முருகனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் முருகனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, தனது மாமனார் சொத்துக்களை தராமல் விற்க முயன்றதால் கொலை செய்ததாக தெரிவித்தாராம். பின்னர் முருகனை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com