மாமியாரை அழைத்துச்சென்று குடும்பம் நடத்தும் மருமகன்: மீட்டுத் தரக்கோரி மாமனார் புகார் மனு

மருமகனிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி மாமனார் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்தார்.

அந்த மனுவில், "எனக்கு திருமணமாகி மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். இந்த நிலையில் மருமகன் எனது மகளை வீட்டில் விட்டு விட்டு என் மனைவியை அழைத்துக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவர் எனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

எனது மனைவியை என்னுடன் சேர்ந்து வாழ அழைத்தால் அவர் வர மறுக்கிறார். என் மனைவியை வீட்டுக்கு அனுப்புமாறு மருமகனிடம் கூறினால் அவர் அனுப்ப மறுக்கிறார். மேலும் எனது கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதற்கு மருமகனின் பெற்றோர் உடந்தையாக உள்ளனர். மருமகனிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com