இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்கள் - பாம்பை விட்டு கடிக்க வைத்தது அம்பலம்


இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்கள் - பாம்பை விட்டு கடிக்க வைத்தது அம்பலம்
x

விசாரணையில் கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருந்தது தெரியவந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (56 வயது). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கணேசன், கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து இறந்ததாக பொதட்டூர் பேட்டை போலீசில் அவரது மகன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் கணசேனின் குடும்பத்தினர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால், அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனம், வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருந்தது தெரியவந்தது. அதனை பெறுவதற்காக, கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் மணவூரை சேர்ந்த பாலாஜி (28 வயது), பிரசாந்த் (35 வயது), நவீன் குமார் (28 வயது), ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (28 வயது) ஆகியோருடன் சேர்ந்து தங்களது தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மோகன்ராஜ், ஹரிகரன் உள்ளிட்ட 6 பேரையம் போலீசார் கைது செய்தனர். இன்சூரன்ஸ் பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து மகன்களே தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story