சோனி இஸட்.வி. இ 1 விலாக் கேமரா அறிமுகம்

சோனி இஸட்.வி. இ 1 விலாக் கேமரா அறிமுகம்
Published on

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் இஸட்.வி. இ 1 என்ற பெயரிலான கேமராவை அறிமுகம் செய்துள்ளது. வீடியோ காட்சிகளை எடுப்பவர்களுக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 35 மி.மீ. முழுமையான பிரேம் இமேஜ் சென்சாரைக் கொண்டுள்ளது. 12.1 மெகா பிக்ஸெல் சி.எம்.ஓ.எஸ். எக்ஸ்.எம்.ஆர். சென்சாரைக் கொண்டுள்ள இதில் பயோன்ஸ் எக்ஸ்.ஆர். இமேஜ் பிராசஸிங் என்ஜின் உள்ளது.

இது முந்தைய மாடல்களைக் காட்டிலும் 8 மடங்கு விரைவாக பிராசஸ் செய்யும் திறன் கொண்டது. 4-கே ரெசல்யூஷனில் காட்சிகளை வெகு நேர்த்தியாகப் படமாக்கும். இந்த கேமராவில் எல்.சி.டி. திரை, புளூடூத் இணைப்பு வசதி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,43,990.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com