பள்ளி, கல்லூரிகளில் விரைவில் மஞ்சப்பை அறிமுகம் - சுற்றுச்சூழல் துறை திட்டம்

பள்ளி, கல்லூரிகளில் விரைவில் மஞ்சப்பை அறிமுகம் செய்ய சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் விரைவில் மஞ்சப்பை அறிமுகம் - சுற்றுச்சூழல் துறை திட்டம்
Published on

சென்னை,

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, 'சுற்றுச்சூழல் நண்பன்' என்ற தலைப்பில், வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இதில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், அவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட உள்ளது. மேலும் அதனை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையிலும் மஞ்சப்பை வடிவமைப்பை மாற்ற சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com