"விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார்"- வணிகவரித்துறை அமைச்சர் பேச்சு

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராவார் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
"விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார்"- வணிகவரித்துறை அமைச்சர் பேச்சு
Published on

சென்னை,

சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராவார் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, சேப்பாக்கம் திருவல்லிகேனி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக ஆவார். அவர் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார்.

சட்டமன்ற உறுப்பினராக தனது பணியினை சிறப்பாக செய்துவருகிறார். இளைஞர்களுக்கு எதிர்காலமாக உதயநிதி இருப்பார். அவர் கண்டிப்பாக விரைவில் அமைச்சராவார் இவ்வாறு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com