

தேனி,
தொடர்மழையால் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி நீர் நிரம்பி வழிகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தேனி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக சோத்துப்பாறை அணை விளங்கி வருகிறது. இப்பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அணைக்கு தற்போது வினாடிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பியுள்ளதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.