தென்னிந்திய கபடி போட்டி; தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார்

மருதகுளத்தில் தென்னிந்திய கபடி போட்டியை முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய கபடி போட்டி; தனுஷ்கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார்
Published on

இட்டமொழி:

நெல்ல அருகே மருதகுளத்தில் சி.எஸ்.ஐ. சி.எம்.எஸ் ஆலய ஸ்தோத்திர பண்டிகையை முன்னிட்டு, மருதகுளம் பிரின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 53-வது தென்னிந்திய அளவிலான மின்னொளி ஆண்கள் கபடி போட்டி காமராஜர் திடலில் 3 நாட்கள் நடந்தது. விழாவில் சபாநாயகர் மு.அப்பாவு கலந்துகொண்டு பரிசு கோப்பைகளை அறிமுகப்படுத்தினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இறுதிப்போட்டியில் வென்ற சென்னை ஐ.சி.எப். அணி முதல் பரிசு பெற்றது. 2-வது பரிசை மதுரை சுங்கவரித்துறை அணியும், 3-வது பரிசை திருச்சி போலீஸ் அணியும், 4-வது பரிசை தமிழ்நாடு போலீஸ் அணியும் பெற்றது.

பரிசளிப்பு விழாவில் பாஸ்டர் எஸ்.யோவான் சாலமோன், ஓய்வுபெற்ற சுங்கவரித்துறை அதிகாரி சாம் அமர்ட்சன், தி.மு.க. அயலக அணி துணை பொறுப்பாளர் மகா கிப்ட்சன், களக்காடு நகராட்சி துணைத் தலைவர் பி.சி.ராஜன், தொழிலதிபர் செல்வசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் தர்மராஜ், செயலாளர் பிரவீன் பாரத், பொருளாளர் அருளானந்தம் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com