தென்குமரை மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தலைவாசல் அருகே தென்குமரை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
தென்குமரை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
Published on

தலைவாசல்:

தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு பக்தர்கள் இரும்பு கம்பியில் அலகு குத்தியும், அக்னி கரகம் எடுத்தும், பூங்கரகம் எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தில் வடகுமரை தென்குமரை, சார்வாய், சாத்தப்பாடி, ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com