தென் தமிழக மாவட்டங்களில் மார்ச் 4, 5-ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக மாவட்டங்களில் மார்ச் 4, 5-ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் மதிய வேளைகளில் வெப்பம் படிப்படியாக அதிகரித்து கானப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதன்படி, மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com