

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய துரை முத்து என்ற குற்றவாளியை பிடிக்க சென்றபோது நடத்தப்பட்ட வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென்மண்டல ஐ.ஜி. முருகன் இன்று நிவாரண உதவி வழங்கினார். 10 மாவட்டங்களில் உள்ள காவலர்களிடமிருந்து திரட்டப்பட்ட 86 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐ.ஜி. முருகன், சுப்பிரமணியன் குடும்பத்திற்கு மாதம் 42 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.