

சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் பணிமனையில் இன்று (13-ந்தேதி), நாளை (14-ந்தேதி) ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை-விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 12 பெட்டிகள் கொண்ட 5 பயணிகள் ரெயில்கள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 12 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரத்தில் இருந்துகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66056), தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயிலும் (66045), விழுப்புரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயிலும் (66046), சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரெயிலும் (66033), இன்று (திங்கட்கிழமை) 8 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்படும். மேலும், திருவண்ணாமலையில் இருந்து நாளை (14-ந்தேதி) காலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயில் (66034) 8 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.