திருச்சி-ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வருகிற 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது.
 திருச்சி-ஜோத்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் இருந்து திருச்சி வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(வண்டி எண்.22497) வருகிற 31-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து ஸ்ரீ கங்காநகர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22498) வருகிற செப்டம்பர் 4-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு 3-வது வகுப்பு ஏ.சி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது.

இதேபோல, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து திருச்சி வரும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20481) நாளை (6-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரையிலும், மறுமார்க்கமாக, திருச்சியில் இருந்து ஜோத்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(20482) வருகிற 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com