கடந்த நிதியாண்டில் சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.243 கோடி வருவாய்

பயணிகளின் வசதிக்கான செயல்பாடுகளில் தெற்கு ரெயில்வே தேசிய அளவில் முதலிடம் வகித்துள்ளது
கடந்த நிதியாண்டில் சிறப்பு ரெயில்கள் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.243 கோடி வருவாய்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2025-26-ம் ஆண்டில் மட்டும் சென்னையைத் தலைமையி டமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரெயில்வே மண்ட லத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விழாக்காலங்களைக் கருத்தில் கொண்டும் 229 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரெயில்கள் 2,153 முறை இயக்கப்பட்டுள்ளன.

அதன்மூலம் 32.98 லட்சம் பேர் பயணித்துள்ளனர். சிறப்பு ரெயில்களில் பயணித்தவர்கள் மூலம் தெற்கு ரெயில்வேவிற்கு ரூ.243.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஒரு சிறப்பு ரெயிலில் சராசரியாக 1,312 பேர் பயணித்துள்ளனர். பயணிகளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மூலம் ரெயில் பயணத்தில் காத்திருப்போர் எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு ரெயில்கள் குறித்த அறிவிப்பு ரெயில்வே இணை தளம், செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதால் மக்கள் அறிந்து அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். சிறப்பு ரெயில்கள் இயக்கம் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்கான செயல்பாடுகளில் தெற்கு ரெயில்வே தேசிய அளவில் முதலிடம் வகித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com