ரெயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் விதித்த தெற்கு ரெயில்வே


ரெயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் விதித்த தெற்கு ரெயில்வே
x

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

சென்னை,

ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் விதித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை கொண்ட லக்கேஜ்களை எடுத்து செல்பவர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையிலும், ஏ.சி. 2-ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையிலும், ஏ.சி. 3-ம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையிலும், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையிலும் மட்டுமே லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story