

சென்னை,
நாடு முழுவதும் ரெயில்களில் டீ, காபி விலையை அதிகரித்துக்கொள்ள ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான சுற்றறிக்கையை ரெயில்வே நிர்வாகம், அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பியது.
இதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை சென்டிரல், சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்கள் வழியாக செல்லும் ரெயில்களில் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
அதேநேரம் ரெயில் நிலையங்களில் ஏற்கனவே தயார் செய்துகொண்டு வந்து விற்கப்படும் டீ ரூ.5 என்ற விலையிலே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.