தென்மேற்கு பருவமழை தீவிரம்:பூத்துக்குலுங்கும் மொச்சை செடிகள்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கம்பம் பகுதியில் மொச்சை செடிகள் பூத்துக்குலுக்குகின்றன.
தென்மேற்கு பருவமழை தீவிரம்:பூத்துக்குலுங்கும் மொச்சை செடிகள்
Published on

கம்பம் அருகே ஏகலூத்து, புதுக்குளம், மணிகட்டி ஆலமரம், கம்பம்மெட்டு மலை அடிவாரப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. இங்குள்ள நிலங்களில் கம்பு, சோளம், எள், தட்டைப்பயறு, மொச்சை, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் மானாவாரி நிலங்களில் குறுகியகால பயிர்களை சாகுபடி செய்து நல்ல முறையில் அறுவடை செய்தனர். இதேபோல் இந்த ஆண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது எள், கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர்.

இதில் மொச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை மழை கை கொடுக்காததால் மொச்சை செடிகள் காய்ந்து கிடந்தன. இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லை பகுதியான கம்பம்மெட்டு மலையடிவாரத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால் நிலங்கள் ஈரப்பதத்துடன் உள்ளதால் மொச்சை செடிகள் பசுமையாக வளர்ந்துள்ளன. மேலும் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com