தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை பார்வையிட்டார்.
தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
Published on

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

மேலும் அந்த காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை (Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com