கடம்பூர் காவல் நிலையத்தில் எஸ்.பி. வருடாந்திர ஆய்வு


கடம்பூர் காவல் நிலையத்தில் எஸ்.பி. வருடாந்திர ஆய்வு
x

காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பட்ர் ஜான் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று (3.9.2025) கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

மேலும் மேற்சொன்ன காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை (Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்வின் போது மணியாச்சி உட்கோட்ட டி.எஸ்.பி. அருள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

1 More update

Next Story