குளத்தூர் சிறுமி கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறுமி கொலை வழக்கில் இரவு பகல் பாராமல் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளியை கண்டறிந்து போலீசார் கைது செய்தனர்.
குளத்தூர் சிறுமி கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
Published on

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிறுமி கொலை (குற்ற‌ எண்: 118/2026) வழக்கில் இரவு பகல் பாராமல் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளியை கண்டறிந்து போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளியை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி டி.எஸ்.பி.க்கள் சுனில், சுதீர், சுந்தரபாண்டியன், ஜெகநாதன், பயிற்சி ஏ.எஸ்.பி. ராகுல் V கோபால், பயிற்சி டி.எஸ்.பி. சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலாலெட்சுமி மற்றும் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 116 போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com